அனைத்தையும் இழந்து தவிக்கும் ராஜபக்ச குடும்பம்
அரசியலில் ராஜபக்ச குடும்பத்தினரின் தனித்துவ அடையாளமாக விளங்கிய தேரர்கள் உள்ளிட்ட குழுவினர்களும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ராஜபக்சர்களை கைவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான மாகல்கந்தே சுதந்த தேரர் உள்ளிட்ட, தாம் ராஜபக்ச தரப்பினரை சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் பிக்குகள் மற்றும் அவர்களின் இனவாத கோஷங்கள் என்பன தற்போது கைமாறியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கண்டியில் இருந்து கொழும்பு வரை முன்னெடுக்கப்படும் நடைபயணத்தில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு, அந்த கோஷங்களைத் தமது சொந்தமாக்கிக் கொண்டுள்ளன.
தவிக்கும் ராஜபக்ச குடும்பம்
இவ்விரு கட்சிகளையும் தவிர, திலித் ஜயவீர, விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினரும் இந்த நடைபயணத்தின் தீவிர பங்காளிகளாக மாறியுள்ளமையை அவதானிக்க முடிந்துள்ளது.

தாராளவாதிகள் எனத் தம்மை வெளிக்காட்டிக் கொண்ட பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஷிரால் லாக்திலக்க, ரஜித் கீர்த்தி தென்னகோன் போன்ற ஒரு குழுவினரும், ராஜபக்சக்களுக்கே உரித்தான இனவாத அரசியல் உத்திகளுக்கு இணங்கிச் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam