கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டுப் பயணிகள் அதிரடியாக கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டுப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (15.10.2026) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5 கோடியே 10 லட்சம் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிச் செல்ல முற்பட்டபோதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதுடைய இருவர் மற்றும் 33 வயதுடைய ஒருவர் அடங்களாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சாரதிகள் என அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் இன்று அதிகாலை 12:30 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸ் சேவைக்குச் சொந்தமான TG-307 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த 3 பயணப்பைகளைச் பரிசோதித்தபோது, அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களுக்குள் மிகச் நுட்பமான முறையில் பொதி செய்யப்பட்டிருந்த 05 கிலோகிராம் 096 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைக்காக இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam