நாமலுக்கு தெரிந்த உண்மை! தனது கைது தொடர்பில் பேச முடியாத இக்கட்டான நிலையில்..
தன்னுடைய கைது தொடர்பில் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தைக் கூட இதுவரை பேசியதில்லை. காரணம் அவர் தொடர்பான உண்மை அவருக்கேத் தெரியும் என்பதால்தான் என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இப்போது நாட்டில் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இங்கு பலர் பதற்றமடைந்துள்ளனர். அவர்கள் நிரபராதிகள் என்றால் இவ்வாறு பதற்றமடைய வேண்டிய அவசியம் என்ன?
உண்மை தெரிந்த நாமல்
நாமல் ராஜபக்சவையே எடுத்துக்கொள்வோம், அவர் விளக்கமறியலில் இருந்து கொண்டு நாடாளுமன்றத்திற்கு வருகின்றார். உரையாற்றவும் செய்கின்றார். அந்த உரையில் குறைந்தபட்சம் நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்திக்கூட தான் நிரபராதி என்று அவர் எங்காவது கூறுகின்றாரா?
சிறிய குற்றச்சாட்டுக்களின் காரணமாகத்தான் நான் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றேன் என்று சரி அவர் தெரிவித்துள்ளாரா, அல்லது என்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று கூறுகின்றாரா?
அவர் விளக்கமறியலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்து ஆற்றிய உரைகளை நன்றாகக் கவனித்துப் பாருங்கள். எந்தவொரு உரையிலாவது, நான் நிரபராதி, நான் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன் என்று எங்கும் அவர் கூறவில்லை.
அதற்குப் பதிலாக வேறு பல விடயங்கள் குறித்து இங்கு பேசியிருக்கின்றார். அரசாங்கத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்று எங்களுக்கே பாடம் புகட்டுகின்றார். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் தான் நிரபராதி என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்து ஏன் அவர் பேசுவதில்லை. தனக்கு என்ன நடந்தது என்பது அவருக்கேத் தெரியும்.

இவர்கள் அனைவரும் தற்போது தாங்கள் செய்த செயல்களின் விளைவுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, தற்போதைய எதிர்க்கட்சியினர் திசை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், எப்படியாவது காவி உடைக்குப் பின்னால் மறைந்து கொண்டாவது இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியுமா என்று முயற்சி செய்தார்கள். அதற்காகவே மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கச் சென்றார்கள். ஆனால், இறுதியில் அனைவரும் அவமானப்பட்டுத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam