பேஸ்புக் ஊடாக மணமகன், மணமகள் தேடுவோருக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் மணமகன் மற்றும் மணப்பெண்ணுக்கு திருமணப் பொருத்தம் பார்த்து தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் பேஸ்புக் கணக்கிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெலியத்தை பகுதியை சேர்ந்த 30 வயதான வர்த்தகர் ஒருவரே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மணமகன் மற்றும் மணமகள்களை தேடித் தருவதாக கூறும் பேஸ்புக் கணக்கொன்றுடன் குறித்த நபர் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார்.
பேஸ்புக் மோசடி
மணமகளை தேடித் தருவதாயின் மணமகனிடமிருந்து 8,000 ரூபா வைப்புத்தொகையும், மணமகள் தரப்பிற்கு 4,000 ரூபாவும் எனவும் இரு தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு செய்த நபர், மணமகளைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் 8,000 ரூபாவை சந்தேகநபர்களின் வங்கிச் கணக்கில் வைப்பிலிட்டுள்ளார்.
இதனையடுத்து, மோசடியாளர்கள் பெண் ஒருவரின் கையடக்க தொலைபேசி இலக்கத்தை கொடுத்துள்ளனர்.
பண மோசடி
குறித்த கைப்பேசி இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொண்டபோது பெண் ஒருவர் பதிலளித்துள்ளார். அத்துடன், அவ்வழைப்பு சில வினாடிகள் மட்டுமே நீடித்துள்ளது.

அதன்பின்னர் பலமுறை அந்த இலக்கத்திற்கு அழைப்பு விடுத்தபோதிலும் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.
இது குறித்து தெரிவிப்பதற்காக குறித்த பேஸ்புக் கணக்கின் உரிமையாளர்களுக்கு அழைப்பு மேற்கொண்டபோதிலும் அவர்களும் அவ்வழைப்புகளைத் தவிர்த்துள்ளனர்.
இதன் காரணமாகவே அந்நபர் குறித்த பேஸ்பு கணக்கிற்கு எதிராக முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam