ஹோட்டல் அறையில் திடீரென உயிரிழந்த நபர்! இளம் பெண் இரகசியமாக தப்பியோட்டம்
கம்பஹா - சபுகஸ்கந்த பகுதியில் பெண் ஒருவருடன் ஹோட்டலுக்கு சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் திடீரென அறையிலேயே உயிரிழந்துள்ளார்.
இதன்போது குறித்த நபர் உயிரிழந்த உடனேயே அவருடன் சென்ற பெண் ஹோட்டலை விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதிக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் இடையே தவறான உறவு இருந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திடீரென மரணம்
இருவரும் சேர்ந்து ஒரு ஹோட்டல் அறையை முன்பதிவு செய்து அங்கு சென்றபோது, அவர் திடீரென உடல்நலம்குன்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடந்த நேரத்தில், சம்பந்தப்பட்ட பெண் அறையிலிருந்து வெளியே வந்து, தன்னுடன் வந்த நபர் படுக்கையில் சுயநினைவின்றி இருப்பதாக ஹோட்டல் ஊழியர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது நிலைமையை உணர்ந்த அந்த ஊழியர், உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆம்புலன்ஸ் சேவையை அழைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல்
அதன்படி, ஹோட்டலுக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் அதிகாரிகள் சுயநினைவின்றி இருந்த நபரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர், ஹோட்டல் ஊழியர் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை பற்றிய தகவலை குறித்த பெண்ணிடம் விசாரித்து, அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அந்த பெண் ஹோட்டலில் இருந்து தப்பியோடிவிட்டதாகவும், அவரிடமிருந்து மேலதிக தகவல்கள் எதுவும் பெற முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது.
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam