அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்து! நன்றி தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச
சவூதி அரேபியாவில் இலங்கைச் சேர்ந்த பொறியியலாளரான அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இதில் பங்காற்றிய அனைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் அனோஜனின் உயிர் காப்பாற்றப்பட்டமை குறித்துத் தாம் அளப்பரிய மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அவர், சவூதி மன்னருக்கும் சவூதி உச்ச நீதிமன்றத்திற்கும் தனது நன்மதிப்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
அனைவரையும் பாராட்டியுள்ள சஜித்
மேலும், ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான பைஸர் முஸ்தஃபா, உபுல் குமாரப்பெரும உள்ளடங்கிய சட்டக் குழுவினர், இலங்கைகான சவூதி தூதுவர் மற்றும் அனோஜனின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கப் பாடுபட்ட அனைவருக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தானும் தனது அணியினரும் அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.