ஞானசார தேரருக்குச் சிறைச்சாலை ஆடை அணிவிக்கப்பட்ட விவகாரம்! அமைச்சர் நளிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்குச் சிறைச்சாலை ஆடை அணிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சர்ச்சைகளை அடுத்து, பௌத்த பிக்குகளுக்கான சிறைச்சாலைச் சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான துரித நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (13.10.2026) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்போதைய சிறைச்சாலைச் சட்ட விதிகள்
மூன்று வருடங்களுக்கும் அதிகமான கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும் பௌத்த பிக்குகள் விடயத்தில், தற்போதைய சிறைச்சாலைச் சட்ட விதிகள் மற்றும் பாரம்பரிய வழக்கங்களின் அடிப்படையிலேயே அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர்.

ஞானசார தேரர் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளைக் கருத்திற்கொண்டு, நிலவும் சட்ட விதிகளில் அவசியமான மாற்றங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உரிய திருத்தங்கள் அடங்கிய அறிக்கை
இந்தக் குழுவினர் இந்த வாரத்துக்குள் உரிய திருத்தங்கள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.
எதிர்காலத்தில் சிறைச்சாலைகளில் பௌத்த பிக்குகள் எதிர்கொள்ளும் இத்தகைய அசௌகரியங்கள் மற்றும் சந்தேகங்களை தவிர்க்கும் பொருட்டு, மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளைப் பெற்று முறையான சட்ட சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri