கல்லடி பாலத்தில் அதிர்ச்சி சம்பவம்! வாவியில் குதித்த யுவதியை உயிருடன் மீட்ட மீனவர்கள்
மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயதுடைய யுவதியை மீனவர்கள் மீட்டுக் காப்பாற்றி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தவறான முடிவு
குறித்த யுவதி கல்லடி பழைய பாலத்தில் தனது பாதணி, கைப்பை மற்றும் குடை ஆகியவற்றைக் கைவிட்டுவிட்டு வாவியில் குதித்துள்ளார்.
இதன்போது, வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் யுவதி நீரில் வீழ்ந்ததைக் கண்டு உடனடியாகச் செயற்பட்டு, அவரை மீட்டு கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

பின்னர், 1990 அவசர நோயாளர்காவு வண்டி சேவையின் ஊடாக யுவதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார், அவர் வாவியில் குதித்தமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக விசாரணை
இதேவேளை, கடந்த மாதமும் குறித்த பாலத்திலிருந்து வாவியில் குதித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 12ஆம் திகதி வரை 90 பேர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்து கொண்டுள்ளதாகப் பொலிஸ் மாவட்டப் பிரிவின் புள்ளிவிபரத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri