அமைச்சர் லால்காந்தவிடம் உதவி கோரிய ஞானசார தேரர்!
ஞானசார தேரரும் அமைச்சர் லால் காந்தவும் நண்பர்களாவர்.ஞானசார தேரர் சிறைப்படுத்துவதற்கு முன்னர் அமைச்சர் லால்காந்தவுடன் தொலைபேசியில் பேசி உதவிக் கேட்டுள்ளதாக ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கிய இத்தேகந்த ஆனந்தசிறி தெரிவித்துள்ளார்.
இவர் தான் ஞானசார தேரரின் காவி உடை அகற்றியதற்கு எதிராக பாதயாத்திரையை ஏற்பாடு செய்தவராவார்.இவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த அவர்,
லால்காந்தவுடன் ஞானசார என்ன பேசினார்
அமைச்சர் லால்காந்த செய்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ் செய்திகளை எனக்கு காட்டினார்.உங்கள் கர்மாவை நீங்கள தான் அனுபவிக்க வேண்டும்.தன்னை பெலவத்தைக்கு வந்து சந்திக்குமாறும் 'கிட்' செய்து வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது காவி உடையில்லாமல் வருமாறு தெரிவித்துள்ளார்.அத்தோடு 'கடைசியில் எனக்குச் செய்ய ஒன்றுமில்லை மச்சான்' என்றும் குறுஞ் செய்தியும் அனுப்பியுள்ளார்.அதை நான் பார்த்தேன்.

லால்காந்த அப்படி இல்லையென்றால் சொல்லச் சொல்லுங்களேன் நான் சவால் விடுகிறேன். ஞானசார தேரர் எனக்கு அனைத்தையும் காட்டினார். பல்கலைக்கழகங்களில் தேரர்களை கிட் செய்வது என்றால் காற்சட்டை சேர்ட்டுகளுடன் செல்வது அதற்கு தேரர் உடன்படவில்லை.
ஜனாதிபதி ஒன்றும் தெரியாததுபோல் பேசுகிறார்.தேரர்கள் தவறு செய்வதை தான் அறிந்ததில்லை என்று கூறுகிறார். பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டங்களுக்கு தாடி வளர்த்து கிட் செய்யக் கற்றுக் கொடுத்தது யார்? ஜே.வி.பி.தானே.
50 இலட்சம் கையொப்பம வரை செல்வோம். ஞானசார தெரருக்கு பொதுமன்னிப்பு ஜனாதிபதி வழங்காமல் இருக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.