கொட்டும் மழையிலும் கொழும்பில் போராட்டம்! PTA சட்டத்தை இரத்துச் செய்யக் கோரிக்கை
அரச பயங்கரவாதம் இனியும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக இரத்துச் செய்யக் கோரியும் கொழும்பில் நேற்று(13) செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை (PSTA) உடனடியாகக் கைவிடுமாறும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
போராட்டம்
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக நேற்று பிற்பகல் கொட்டும் மழையிலும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
காலங்காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இரத்துச் செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அனைத்துவிதமான அரச அடக்குமுறைச் சட்டங்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலக வளாகப் பகுதியில் போராட்டம் நடைபெற்றமையால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.





Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan