நிலக்கரி இறக்குமதி மோசடியால் 20 பில்லியன் ரூபா நட்டம் ! மரிக்கார் எம்.பி. சுட்டிக்காட்டு

Saidulla Marikkar Crime Law and Order
By Aanadhi Oct 13, 2026 02:24 PM GMT
Report

கடந்த காலத்தில் மோசடியாக மேற்கொள்ளப்பட்ட தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக 20 மில்லியன் ரூபா அளவில் நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மரிக்கார் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (13.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் 15.68 பில்லியன் ரூபா மட்டுமே என்று அரசாங்கம் கூறிவருகின்றது. ஆனால் குறித்த இறக்குமதியில் இடம்பெற்ற ஊழல் காரணமாக நாட்டுக்கு சுமார் 20 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

 நிலக்கரி இறக்குமதி மோசடி

அதே நேரம் இந்த நிலக்கரி ஊழலால் ஏற்பட்ட நஷ்டம் 15.68 பில்லியன் ரூபாவை மட்டுமே என்றும், 'பிணையப் பிணை'(Performance Bond) மூலம் 16.9 பில்லியன் ரூபா கையில் உள்ளதால் அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும் என்றும் ஜனாதிபதியின் நண்பரான அமைச்சர் அனுர கருணாத்திலக்க கூறி வருகின்றார்.

அதன் மூலம் முன்னைய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை காப்பாற்ற முயற்சிக்கிறார். இது முற்றிலும் பொய்யான கூற்றாகும். அடிப்படை வசதிகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தற்போது கிடைத்துள்ளது.

நிலக்கரி இறக்குமதி மோசடியால் 20 பில்லியன் ரூபா நட்டம் ! மரிக்கார் எம்.பி. சுட்டிக்காட்டு | 20 Billion Rupee Loss Due To Coal Import Scam

மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான குழு தயாரித்த இந்த அறிக்கையை முழுமையாகப் படிக்காமல் அமைச்சர் இந்த பொய் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தரமற்ற நிலக்கரி காரணமாக தேவையான 300 மெகாவாட் மின்சாரத்தைப் பெற முடியாமல் போனதால், மேலதிக மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய 8.572 பில்லியன் ரூபா செலவாகியுள்ளது. 300 மெகாவாட் உற்பத்தி செய்யப்படாததால், கூடுதல் நிலக்கரியைப் பயன்படுத்தியமையால் ஏற்பட்ட இழப்பு 7.099 பில்லியன் ரூபாவாகும்.

இது தவிர, கூடுதல் பராமரிப்புப் பணிகளுக்காக 80.4 மில்லியன் ரூபாவும், தரமற்ற நிலக்கரியால் சேர்ந்த சாம்பலைக் கட்டுப்படுத்த 13.1 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

 உரிய விசாரணை

ஒப்பந்தம் செய்யப்பட்ட 25 கப்பல்களில் 19 கப்பல்கள் மட்டுமே நாட்டிற்கு வந்தடைந்தன. எஞ்சிய 6 கப்பல்களுக்குப் பதிலாக அவசர கொள்முதல் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட 5 கப்பல்களுக்கு, சந்தை விலையை விட 2,284 மில்லியன் ரூபா அதிகமாகச் செலுத்த வேண்டியேற்பட்டது.

மேலும், அவசர கொள்முதலில் வந்த ஒரு கப்பல் 5 நாட்கள் தாமதமானதால், மேலதிக மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய 402.8 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது.

நிலக்கரி இறக்குமதி மோசடியால் 20 பில்லியன் ரூபா நட்டம் ! மரிக்கார் எம்.பி. சுட்டிக்காட்டு | 20 Billion Rupee Loss Due To Coal Import Scam

கொள்முதல் விதிமுறைகளை மாற்றி, தரமற்ற நிலக்கரியைக் கொண்டுவர வழிவகுத்தது குமார ஜயகொடியின் காலத்திலாகும். எனவே இந்த ஊழலின் பொறுப்பிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. இது தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை (CID) என்பன விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளன.

இந்த உத்தியோகபூர்வ அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கி வைக்கப்படும்.

அதன் பின்னர் இது ஜனாதிபதி ஆணைக்குழு அல்லது உரிய விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்' என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

[

அமைச்சர் லால்காந்தவிடம் உதவி கோரிய ஞானசார தேரர்!

அமைச்சர் லால்காந்தவிடம் உதவி கோரிய ஞானசார தேரர்!

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US