கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்
கொழும்பிலுள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்ததாக கூறப்படும் பெண் தொடர்பில் உடனடியாக பிரேத பரிசோதனை நடத்துமாறு மாளிகாகந்த பதில் நீதவான் பிரேமலால் அத்துகோரள, கொழும்பு பிரதான நீதிவான் மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையொன்றில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
உயிரிழந்ததாக கூறப்படும் தனது தாயாரின் உடலை இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக தனக்கு ஒப்படைக்காமல் குறித்த தனியார் வைத்தியசாலையில் வைத்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் மகள் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் விசாரித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த பிரேத பரிசோதனையை நடத்தி சடலத்தை உயிரிழந்த பெண்ணின் மகளிடம் ஒப்படைக்குமாறும் பதில் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan