ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு - கசிந்துள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவிற்காக மருத்துவக்குழு ஒன்றை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது இதய சிகிச்சை தொடர்பான மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய மருத்துவமனையின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
நிதி மோசடி வழக்கில் கைது
அரச வங்கியிலிருந்து பெறப்பட்ட ரூ. 10 மில்லியனை முறைகேடாக பயன்படுத்திய ஊழல் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றச்சாட்டுகளின் பேரில், ஷிரந்தி ராஜபக்ச கடந்த ஏழாம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று (13.10.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
இதன்போது ஷிரந்தி ராஜபக்சவை இம்மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஷிரந்தி ராஜபக்ச சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri