வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய் மாயம்! ஊவா பரணகமவில் சோகம்
ஊவா பரணகம தேர்தல் தொகுதிக்குட்பட்ட கலஹகம பகுதியில் உள்ள சீதா ஓயாவைக் கடக்க முற்பட்ட போது, 43 வயதுடைய பெண்ணொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (14.10.2026) இடம்பெற்றுள்ளது.
தெல்ஹவாடிகம பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான குறித்த பெண் மூன்று பிள்ளைகளின் தாயார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தேடும் பணிகள் முன்னெடுப்பு
வேலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மேலும் ஐந்து பேருடன் இணைந்து அவர் ஓயாவைக் கடக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல்போன பெண்ணைத் தேடும் பணிகளில் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவதானத்துடன் செயற்படவும்
இதேவேளை, பதுளை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை நிலவி வருவதுடன், கடந்த 24 மணித்தியாலங்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியான மழை காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவற்றைக் கடக்கும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan