இனவாதம் இன்னமும் ஒழிக்கப்படவில்லை – லால்காந்த
நாட்டில் இன்னமும் இனவாதம் ஒழிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத் தடைச் சட்டத்தை ரத்து செய்ய உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்பினர் தங்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையில் இந்த சட்டம் தொடர்பில் தங்களது விமர்சனங்களை முன்வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வகையான விமர்சனங்களையும் கருத்திற் கொண்டு இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இன்னமும் இனவாதம் தலையை மறைத்துக் கொண்டிருப்பதாகவும் இன்னமும் இல்லாதொழிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சந்தர்ப்பம் கிடைத்த உடன் இனவாதத்தை தலைதுக்கச் செய்ய எடுக்படும் முயற்சிகளை அவதானிக்க முடிவதாகத் தெரிவித்துள்ளார்.
இனவாதத்தை இல்லாதொழிக்கவும் தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யவுமு் புதிய சட்ட மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக லால்காந்த தெரிவித்துள்ளார். புதிய சட்டம் தொடர்பிலான விமர்சனங்கள் எழுப்பப்படுவது பற்றி கவலையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri