சிறுவனை துர்நடத்தைக்குட்படுத்திய பௌத்த தேரர்! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
புதிதாக துறவு பூண்ட சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த வழக்கிற்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, பௌத்த தேரர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் பிற தண்டனைகளை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் சாட்சியம்
பாதிக்கப்பட்ட சிறுவனின் சாட்சியம் நம்பிக்கைக்குரியதாகவும் உண்மைத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளதால், அதன் அடிப்படையில் விசாரணைக் நீதிபதி தீர்ப்பு வழங்கியதில் தவறில்லை என மேல்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

அத்துடன், குறுக்கு விசாரணையின் போது கண்டறியப்பட்ட சிறிய முரண்பாடுகள் பாலியல் துர்நடத்தை தொடர்பான முதன்மை குற்றச்சாட்டுகளைப் பாதிக்கவில்லை என்றும், மன்று தெரிவித்தது.
முன்னதாக, 2014 நவம்பர் 23 ஆம் திகதிக்கும் 2015 ஜனவரி 23 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், பொலன்னறுவையிலுள்ள விஹாரையொன்றில் தங்கியிருந்த 7 வயது சிறுவனைப் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தியதாக சிரேஷ்ட தேரர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
நஷ்டஈடு
இந்த நிலையில், 2 குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அத்துடன், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா ரூ. 50,000 அபராதமும்,அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
அதேநேரம், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 100,000 ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri