மதுபோதையில் இருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் கைது
திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கடமையாற்றி வந்த இரு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டில் இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரும், அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யானைகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், யானை மின்வேலிகளைப் பராமரித்து பாதுகாக்கும் பணிகளில் சிவில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில், கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த இரு உத்தியோகத்தர்களையும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவர்கள் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அவர்களிடமிருந்து போத்தலில் அடைக்கப்பட்டிருந்த சாராயமும் மீட்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இருவரும் மொரவெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர், மருத்துவப் பரிசோதனைக்காக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, இருவரும் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan