ஞானசார தேரருக்காகக் கொழும்பில் திரண்ட பிக்குகளால் கடும் வாகன நெரிசல்
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறும், பௌத்த தேரர்களின் மத உரிமைகளைப் பாதுகாக்குமாறும் வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபேரணி, ஜனாதிபதி செயலக வளாகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த நடைபேரணியை முன்னிட்டு, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அதிகளவான பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாகன நெரிசல்
அதேவேளை, நடைபேரணி காரணமாக காலி முகத்திடல் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான பௌத்த தேரர்கள் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள வாரியபொல சுமங்கல தேரரின் உருவச்சிலைக்கு முன்பாக கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபேரணி, இன்று கொழும்பில் நிறைவடைகின்றது.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri