மதீனா பகுதியில் ஏவுகணை வீச்சு! இடைமறித்து அழித்த சவூதி அரேபியா
மதீனா பகுதியை இலக்கு வைத்து வந்த க்ரூஸ் ஏவுகணை ஒன்றை தங்கள் வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளதாக,சவூதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் இராணுவக் கூட்டணி தெரிவித்துள்ளது.
இது குறித்து சவூதி கூட்டணியின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிக்கி எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதீனா பிராந்தியத்தில் ஏவுகணை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த மேலதிக விபரங்களோ, ஏவுகணை ஏவப்பட்ட இடம் குறித்த விபரங்களோ அவர் உடனடியாக வெளியிடப்படவில்லை.
தாக்குதல்கள்
இதேவேளை, சவூதி அரேபியா மீது இன்றைய தினம்(15.10.2026) எவ்வித தாக்குதல்களையும் நடத்தவில்லை என யேமனின் ஹூதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே சவூதி அரேபியாவின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை இலக்கு வைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri