இஸ்ரேலில் உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பியோடிய இலங்கையரின் பரிதாப நிலை
வடக்கு இஸ்ரேலின் லெபனான் எல்லைக்கு அருகில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அவர் அயன்டோம் அமைப்பினால் அழிக்கப்பட்ட ஏவுகணையின் இரும்புத் துண்டினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.
குறித்த நபரின் தலையில் இரும்புத் துண்டினால் காயம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சைரன் ஒலி
காயமடைந்த இலங்கையர் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களின் போது சைரன்கள் ஒலித்தவுடன் அவர்கள் பாதுகாப்பான அறைக்கு ஓடிக்கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri