இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்: இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் சித்தார்த்தன் எச்சரிக்கை(Video)
இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகள், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்தால் இலங்கை மிகவும் ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய (07.12.2023) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
சீனாவின் ஆதிக்கம்
“வெளிவிவகார அமைச்சின் கொள்கை என்பது இலங்கை போன்ற மிகச்சிறிய நாட்டிற்கு மிக முக்கியமான மற்றும் அவதானத்திற்குரிய விடயமாகும்.
பிராந்திய வல்லாதிக்க சக்திகள் எல்லாம் உலகில் தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கு முயன்றுகொண்டிருக்கின்ற இந்த வேளையில் நாங்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.
இப்போது இந்தியாவுக்கு எதிராக சீனா இலங்கையில் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கான முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கின்றது.
சீனா மற்றும் இந்தியா போன்ற வல்லாதிக்க சக்திகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும் என நான் கூறவில்லை.
மாறாக எந்த தரப்பினரையும் பகைக்காத வகையில் இலங்கை நடந்துகொள்ள வேண்டும் என்பதையே நான் கூறுகின்றேன்.
அயல்நாட்டுடன் எவ்வளவு தூரம் நாங்கள் அவதானமாக இருக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை நான் கூறுகின்றேன்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
