ரஷ்யா அடுத்து இலக்கு வைக்கும் நாடு!
உக்ரைனுக்கு போரில் வழங்கும் ஆதரவை குறைத்தால், தமது நாடும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக ஜெர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சர் ஜொஹான் வெடெபோல் எச்சரித்துள்ளார்.
ஜெர்மனியின் அரசாங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அமெரி்க்காவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அமெரிக்க அரசு நேட்டோ கூட்டணிக்கும், ஐரோப்பிய நாடுகளுடன் உள்ள பரஸ்பர பாதுகாப்பு பொறுப்புகளுக்கும் உறுதியாக உள்ளது என்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டார்.

ஐரோப்பியர்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கு பெறவில்லை என்பது உண்மை அல்ல” என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு நாங்கள் காட்டும் நிலைப்பாடு மற்றும் உறுதி, பிறரின் முடிவுகளை சார்ந்தது அல்ல. உக்ரைனில் இது தோல்வியடைந்தால், அடுத்த இலக்கு நாமாகலாம் என தெரிவித்துள்ளார்.
அதனால்தான் உக்ரைனுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என வெடெபொல் கூறியுள்ளார்.
மேலும், பாதுகாப்பு உத்தரவாதங்களுக்குப் பதிலாக நேட்டோ உறுப்புரிமையை பெறாமல் இருப்பதனை பரிசீலிக்க முடியும் என உக்ரைன் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் ரஷ்யா சமாதான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் சாதகமான தீா்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.