வரவு செலவுத் திட்டம் குறித்து அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கூறும் விடயம்
வரவு செலவுத் திட்டத்தை செயல்படுத்துவதில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கூறுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
சம்பள அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அனைத்து துறைகளையும் கவனித்துள்ளோம். மறுவாழ்வு பெறும் குழந்தைகள், அரச ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இருவரையும் கவனித்து அவர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம்.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கவனித்து, அவர்களின் மேம்பாட்டிற்காக ஒரு பெரிய தொகையை ஒதுக்கி, அவர்கள் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதை உறுதி செய்துள்ளோம்.
மக்களின் பங்களிப்பு
ஜனாதிபதி தனது உரையில் கூறியது போல், வரவு செலவுத் திட்டங்களை செயல்படுத்துவதில் மக்களின் பங்களிப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
கடந்த காலங்களில் அரசாங்கங்கள் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை நடத்துவதற்கு மட்டுமே நிதி ஒதுக்கின, ஆனால் அதன் கடன்களை அடைத்து பொருளாதார ரீதியாக சாத்தியமான முயற்சியாக மாற்றுவதற்கு நாங்கள் நிதி ஒதுக்கியுள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
You May Like This
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |