மாதமொன்றுக்கு 5 இலட்சம் ரூபா வருமானம்! விவசாயிகள் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம்

Mahinda Amaraweera Ranil Wickremesinghe Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Benat Sep 17, 2024 01:57 PM GMT
Report

விவசாயிகள் மாதம் ஒன்றுக்கு சுமார் 4 - 5 இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டும் வகையில் அரசாங்கம் திட்டத்தைத் தயாரித்துள்ளது என்று விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து  நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

22இல் ஜனாதிபதியாக ரணில் மீண்டும் பதவியேற்பு : வேலுகுமார் எம்.பி. ஆரூடம்

22இல் ஜனாதிபதியாக ரணில் மீண்டும் பதவியேற்பு : வேலுகுமார் எம்.பி. ஆரூடம்

முழு இலங்கையினதும் ஆதரவு ரணிலுக்கு

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேர்தலின் வெற்றி அலை, தேர்தல் பிரசாரத்தின் முடிவிலேயே தொடங்குகிறது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்கு முன்கூட்டித் தயாராகிய அனைவரும் தோற்றனர். கடைசி நிமிடத்தில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தோம் என்பது உங்களுக்குத் தெரியும்.

மாதமொன்றுக்கு 5 இலட்சம் ரூபா வருமானம்! விவசாயிகள் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம் | Sri Lanka Presidential Election 2024

ஆனால் இன்றைய நிலையில்,  முழு இலங்கையினதும் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும்.

அத்துடன், இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 பேரில் யார் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முன்வந்தனர் என்பது மக்களுக்குத் தெரியும்.

யாராலும் முடியாது என்று சொன்னதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 'இயலும்' என்று செய்து காட்டிவிட்டே உங்கள் முன்வந்துள்ளார். குழுவாக, நாங்கள் அவரை ஆதரிக்க முடிவு செய்தோம். ஏனெனில் அவருக்கு 'இயலும்' என்று எங்களுக்குத் தெரியும்.

நான் விவசாய அமைச்சராக அமைச்சுப் பொறுப்பை ஏற்றபோது விவசாயிகளுக்கு உரம் இல்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக ஜனாதிபதி பதவியை ஏற்று விவசாயிகளுக்கு உரம் வழங்க ஏற்பாடு செய்தார். அதனால், இன்று நாடு அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளது. நெல் விவசாயிகளுக்கு மட்டுமின்றி மற்ற விவசாயிகளுக்கும் உர மானியம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பாரம்பரிய விவசாயத்தில் இருந்து கடந்து, நவீன விவசாயத்தை கிராமத்திற்கு கொண்டு வந்துள்ளோம். விவசாயிகளுக்கு இன்று பலன் கிடைத்துள்ளது.

விவசாயிகள் மாதம் ஒன்றுக்கு சுமார் 4 - 5 இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டும் வகையில் அரசாங்கம் திட்டத்தைத் தயாரித்துள்ளது.

மாதமொன்றுக்கு 5 இலட்சம் ரூபா வருமானம்! விவசாயிகள் தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம் | Sri Lanka Presidential Election 2024  

சவால்களை ஏற்றுக்கொண்டால், அந்த சவாலை நாம் வெல்ல வேண்டும். மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கிறோம். இன்று நாடு அழிந்துவிட்டது என்று சிலர் கூறுகின்றனர்.

இந்த அழிவுக்கு சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார ஆகியோரும் உடந்தை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜே.வி.பி.யே அப்போது இந்த நாட்டை வங்குரோத்தாக்கியது. அன்று சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்துள்ளனர்.

குறைந்த பட்சம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவும் அவர்களுக்கு உரிமை இல்லை. ஒரு நாட்டை ஆளுவதை விடுத்து ஒரு டீக்கடையைக் கூட நடத்த ஜே.வி.பி விற்கு முடியாது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த பாடத்தை அவர்கள் கற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக அன்றி, இந்த நாட்டை வெற்றிபெறச் செய்யவே, கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

தயார் நிலையில் பாதுகாப்பு படையினர்! ரணில் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு

தயார் நிலையில் பாதுகாப்பு படையினர்! ரணில் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கான அனுமதி! காலம் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கான அனுமதி! காலம் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW



1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US