மாவீரர் வாரத்தில் புதிய சர்ச்சை - கொடியை அகற்றுமாறு பொலிஸார் அழுத்தம்
மாவீரர் வாரத்தை முன்னிட்டு நெல்லியடி நகரில் கட்டப்பட்டுள்ள சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகளை அகற்றுமாறு நெல்லியடி பொலிஸார் அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(22.11.2026) இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொடியை அகற்றுமாறு அழுத்தம்
நெல்லியடி நகரில் ஏற்கனவே மாவீரர் நினைவேந்தலுக்கான பந்தல் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோதும், பொலிஸார் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது நினைவேந்தலை முன்னிட்டு கட்டப்பட்டுள்ள கொடிகளையும் அகற்றுமாறு பொலிஸார் வலியுறுத்தி வருவதோடு ஏற்பாட்டாளர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களையும் பெற்றுச் சென்றமை அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தான ஏர்பேக் கோளாறு..! வாகனங்களை மீளப்பெறுவதாக ஹோண்டா மற்றும் டொயோட்டா அதிரடி அறிவிப்பு