மூவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்! 13 ஆண்டுகளின் பின்னர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
2003ஆம் ஆண்டு இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்து, இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இருவருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2003 நவம்பர் 29ஆம் திகதி, யட்டியந்தோட்டையில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டிக்குள் கைக்குண்டு வைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டதில் மூவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்தனர்.
மரண தண்டனை
இந்த வழக்கில் ஏழு பேர் கொண்ட நடுவர் குழு ஒருமனதாக (7-0) இரு குற்றவாளிகளையும் குற்றவாளிகளாகத் தீர்மானித்தது.

இதனையடுத்து, மேல் நீதிமன்ற நீதிபதி சஹானா மாபா பண்டார இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.