அம்பாறையில் கோர விபத்து: இரண்டு நாட்களுக்குப் பின் உயிரிழந்த 21 வயது இளைஞர்
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை(20) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(22.11.2026) இடம்பெற்றுள்ளது.
இருவர் பலி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மல்வத்தைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டிருந்தது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மல்வத்தை 02, புதுநகர் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரன் வர்ஷன் (வயது 23) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனயீனம்
இதனைத் தொடர்ந்து, விபத்தில் படுகாயமடைந்து அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த 21 வயதுடைய துஷாந்த் என்ற இளைஞரும் நேற்று(22.11.2026) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களின் கவனயீனமான மற்றும் தவறான சாரத்தியத்தினாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இரு இளம் உயிர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளமை மல்வத்தை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.