22இல் ஜனாதிபதியாக ரணில் மீண்டும் பதவியேற்பு : வேலுகுமார் எம்.பி. ஆரூடம்
எதிர்வரும் 22ஆம் திகதி எமது நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பது உறுதி என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
கம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ரணிலின் உத்தரவாதம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையகப் பெருந்தோட்ட மக்கள் கடந்த காலங்களில் ஓரங்கப்பட்டும் நிலை இருந்தது. குறிப்பாக நிவாரணக் கொடுப்பனவுகளின்போது, ஏதோவொரு காரணம் காட்டி தோட்ட மக்கள் தட்டி கழிக்கப்படுகின்றனர்.
ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஸ்வசும கொடுப்பனவை மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் ரணில் விக்ரமசிங்க, பிரதமராக இருந்த அரசிலேயே மலையக மக்களுக்கு அதிகபட்சமான வேலைகள் நடைபெற்றன.
தனி வீட்டுத் திட்டத்துடனான புதிய கிராமங்கள், நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் அதிகரிப்பு மற்றும் பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு என பல விடயங்களைக் கூறிக்கொண்டு போக முடியும்.
எதிர்வரும் 22 ஆம் திகதி எமது நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பது உறுதி.
அதன் பின்னர் அன்று நாம் நிறுத்திய வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து முன்கொண்டு செல்ல முடியும். எனவே, நாட்டுக்கும் நமக்கும் வெற்றி கிட்டும் வழி ரணிலின் வழியே ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
