ஜனாதிபதி அநுரவை வெளியேற்றும் இரகசிய திட்டங்கள்! பின்னணியில் தீட்டப்படும் சதிதிட்டம்
தற்போதைய அரசிற்கு அழுத்தத்தை கொடுப்பதற்காக எதிர் தரப்பை பலப்படுத்தும் முயற்சியில் இந்தியா உள்ளது என்று பிரித்தானியா இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
இதேவேளை, இந்தியாவிற்கு அழுத்தத்தை கொடுப்பதில் தற்போதைய அரசும் தீவிரமாக உள்ளது.
சீனா மற்றும் அமெரிக்காதான் இலங்கைக்கு தற்போது உதவிகரம் நீட்டும் நிலையில் உள்ளதால் இந்தியா அதற்குள் ஒரு வகிபாகத்தை எடுக்க முயற்சிக்கின்றது.
அதன் ஒரு அங்கமாகவே நாமல் ராஜபக்சவின் ஒடிசா விஜயத்தை குறிப்பிடலாம். சில விடயங்களை இந்தியாவால் நேரடியாகவே செய்ய முடியாது. நாமல் ராஜபக்சவின் விஜயத்தின் முன்னர் கொழும்பிலுள்ள இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவை சந்தித்துள்ளார்.
நாமலின் இந்திய விஜயமானது எதிர்காலத்திற்கான ஒரு தயாரிப்பு என்றும் கூறப்படுகின்றது.
அதாவது சஜித் பிரேமதாஸவையும் நம்பாமல் நாமலை இந்தியா நம்புகின்றது என்று குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam