மோதரை கடற்றொழில் துறைமுகத்திற்கு அருகில் டீசல் எண்ணெய் கசிவு: கடலோர காவல்படை தீவிர நடவடிக்கை
கொழும்பு- மோதரை கடற்றொழில் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ஏற்பட்ட டீசல் எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்த இலங்கை கடலோர காவல்படையினர் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் ஜயா கொள்கலன் முனையத்திற்கு (JCT) சொந்தமான சேமிப்புத் தொட்டியுடன் இணைக்கப்பட்ட குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக நேற்று (21.11.2026) இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.
கசிந்த டீசல், அந்தப் பகுதியிலுள்ள பிரதான வடிகால் கால்வாய் வழியாக கடலில் கலந்துள்ளது.
டீசலை அகற்றும் பணி
எண்ணெய் மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், கால்வாய் கடலுடன் இணையும் பகுதியில் விசேட எண்ணெய் தடுப்புத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கரையோரப் பகுதிக்கு வந்தடைந்த டீசலை அகற்றும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடல் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்து, கசிந்த எண்ணெயை முழுமையாக அகற்றும் நடவடிக்கைகளை கடலோர காவல்படையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்... News Lankasri