அமெரிக்க போர் விமானம் மற்றும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்! மறுக்கிறது அமெரிக்கா
வளைகுடா வான்பரப்பில் அமெரிக்காவின் F - 16 போர் விமானம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக ஈரான் இராணுவம் கூறிய குற்றச்சாட்டை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) மறுத்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க போர் விமானங்களும் பாதுகாப்பாக இருப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரான் கடற்படை தெரிவித்துள்ள விடயம்
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் கடற்படை கண்ணிவெடியில் மோதி எண்ணெய் கப்பல் தீப்பற்றியதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.

ஓமானின் கசாப் (Khasab) பகுதிக்கு வடக்கு மற்றும் கிழக்கே இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது அடையாளம் தெரியாத ஏவுகணைகள் அல்லது பொருட்கள் தாக்கியதாக பிரிட்டன் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பாதுகாப்புப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தாக்குதல்கள் தொடர்பான தகவல்களில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முரண்பாடு நிலவுகிறது.
42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்... News Lankasri