சஜித் 57 ஆயிரம் ரூபா! ரணில் 55 ஆயிரம் ரூபா! அரச ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் வேட்பாளர்கள்
அடுத்த ஜனவரி மாதத்தில் இருந்து கீழ் மட்ட அரச ஊழியர்களின் சம்பளம் 55 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபத ரணில் மேற்கொண்டுள்ளார். ஆனால், தற்போது சஜித் 57 ஆயிரம் ரூபா தருவதாக கூறுகின்றார். அதற்காக வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் எதுவும் அவருக்கு தெரியாது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தொம்பே பிரதேசத்தில் நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சஜித்தின் குழு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாம் நாடாளுமன்றத்திலேயே முதலில் தெரிவு செய்தோம். அவரை மக்கள் வாக்குளால் ஜனாதிபதியாக தெரிவு செய்து நாட்டை முன்னேற்றுவதற்கான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது.
இப்போது சஜித்துடன் நல்ல குழு இருப்பதாக சொல்கிறார்கள். அந்த நல்ல குழு அன்று ஓடி மறைந்துகொண்டதை மறந்துவிட்டனர். ஜேவீபியினர் நகர சபையை கூட நிர்வகித்ததில்லை. அவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியுமா?
சம்பள அதிகரிப்பு
கல்வி துறை, சுற்றாடல் துறையின், சமூர்த்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காணப்பட்ட சம்பள பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி தீர்வு வழங்கினார். ஆர்பாட்டங்களை தூண்டியவர்களும் களத்தில் உள்ளனர். ஆனால் அவர்களிடம் தீர்வுகள் எவையும் இல்லை.
அடுத்த வருடத்திலும் சம்பள அதிகரிப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த ஜனவரி மாதத்திலிருந்து கீழ் மட்ட அரச ஊழியர் ஒருவரின் சம்பளம் 55 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிக்கும்.
இப்போது சஜித் 57 ஆயிரம் ரூபா தருவதாக சொல்கிறார். அதற்காக வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் எவையும் அவருக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |