திடீரென தேர்தல் பிரசாரக் கூட்டங்களைக் குறைத்த ரணில்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களை திடீரென குறைத்துள்ளார்.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி செலவீனங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பிரசாரக் கூட்டங்கள் ரணில் விக்ரமசிங்க குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் பணிப்புரை
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தயார் செய்திருந்த முப்பது பிரசார கூட்டங்கள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட 90 தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் ரணில் தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை அறுபதாக குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் கிராம மட்டத்தில் சிறிய குழுக் கூட்டங்களை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், மக்கள் பேரணிகளை நடத்துவதற்காக பேருந்து கட்டணம் உள்ளிட்ட இதர செலவகளுக்காக பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேர்தல் செலவு விதிமுறைகளின்படி, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபாவை மட்டுமே வேட்பாளர் ஒருவர் செலவிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 2 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri