கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பிடித்துக் கொடுத்த மக்கள் - பொலிஸார் பாராட்டு
வெலிகம பிரதேச சபைத் தலைவரை சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் பொது மக்களின் ஒத்துழைப்புடன் நேற்று கைது செய்யப்பட்டார்.
மஹரகம நாவின்ன பகுதியிலுள்ள மக்களுடன், பொலிஸாரின் சிறப்பு குழுக்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொது மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு பொலிஸ் ஊடகப் பிரிவு பாராட்டு தெரிவித்துள்ளது.
பொது மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு
கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம், சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதான சந்தேக நபர் நேற்றிரவு மஹரகம பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், ஏனைய மூன்ற பேரும் அனுராதபுரத்தின் கெகிராவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை தொடர்பான விசாரணை, பொலிஸ் மா அதிபரின் முழு மேற்பார்வையின் கீழ் பல குழுக்களால் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அசின், சிம்பு இணைந்து நடிக்கவிருந்த கைவிடப்பட்ட படம்.. இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா! First லுக் போஸ்டர் இதோ Cineulagam
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri