இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தி இல்லையா..!
நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தியா என சந்தேகம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
யூடியூப் தனியார் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லும் போது வெளியான புகைப்படங்களில் அவரது முகம் நீள்வட்டமாக இருந்தது. எனினும், தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள செவ்வந்தியின் முகம் வட்டமாக உள்ளது.
தோற்றத்தில் மாற்றம்
செவ்வந்தியின் தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள் உள்ளன. பியூமி ஹன்சமாலியின் க்ரீமை பாவித்தால் கூட 8 மாதங்களில் அவ்வாறான தோற்றத்தை பெற வாய்ப்பில்லை.
அத்துடன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒழுகல, செவ்வந்தியை நேபாளத்தில் வைத்து பார்த்தவுடன் அவரிடம் 'நலமா?' என வினவுகின்றார்.

செவ்வந்தியை போன்ற உருவ அமைப்பை உடைய மற்றொரு பெண்ணும் அங்கு இருக்கின்றார். இவ்வாறிருக்க, அவர் செவ்வந்தியை எவ்வாறு அடையாளம் கண்டுகொண்டார்?
வாகனம் செலுத்தும் ஒருவர் சாதாரண தவறொன்றை விட்டு பொலிஸாரிடம் சிக்கினால் அவர் பதற்றமடைவார். ஆனால், கொலை குற்றம் புரிந்த செவ்வந்தி, பொலிஸாரிடம் சிக்கும் போது அவரது முகத்தில் எந்தவொரு பதற்றமும் இல்லை. மாறாக, அவரது முகத்தில் சிரிப்பே இருந்தது.
சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயங்கள்
சாதாரணமாக ஒரு குற்றவாளியை அழைத்து வரும் போது, முகத்தை மூடி அழைத்து வருவது வழக்கம். ஆனால், செவ்வந்தி தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு பகிரப்பட்டன.
எனினும், செவ்வந்தி தங்கியிருந்த இடத்தை பார்வையிட பொலிஸார் அவரை அழைத்து செல்லும் போது, முகத்தை மூடி அழைத்து செலகின்றனர். நாடு முழுவதும் அவரின் முகத்தை பார்த்த பின்னர் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?

இதேவேளை, பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹல்பத்தர பத்மே தான் செவ்வந்தி நேபாளத்திற்கு தப்பிச்செல்ல உதவினார். அவர் பொலிஸாரிடம் சிக்கிய பின்னர் செவ்வந்தி தொடர்பான உண்மைகளை கூறுவார் என அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறிருக்க, செவ்வந்தி ஏன் நேபாளை விட்டு செல்லாமல் இருந்தார்? இவ்வாறான விடயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam