நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் ரணிலிடம் கோரவில்லை : சாகர காரியவசம்
பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(Ranil Wickremesinghe) கோரிக்கை விடுக்கவில்லை. எனினும் பொதுஜன பெரமுனவின் விருப்பத்தை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyavasam) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதிகள் உறுதியாக உள்ளன.
கோட்டாபயவின் எஞ்சிய காலம்
நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிந்து இரண்டரை வருடங்களின் பின்னர் எந்த நேரத்திலும் அதனை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.
இந்தநிலையில் பொதுத் தேர்தலை முதலில் நடத்துமாறு கோரிக்கை எதனையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கவில்லை என்றும், பொதுத் தேர்தலை முதலில் நடத்துவது நல்லது என்ற கட்சியின் கருத்தை மட்டுமே தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்(Gotabaya Rajapaksa) எஞ்சிய காலத்திற்கு மாத்திரம் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பொதுஜன பெரமுன உடன்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பின்னர் இரண்டு தரப்புக்கும் இடையில் எந்த உடன்பாடும் இல்லை. ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொருத்தமான ஒருவரை கட்சி முடிவு செய்யும்.
அத்துடன் தமது கட்சியிலும் பல வேட்பாளர்கள் உள்ளனர். எனவே சரியான நேரத்தில் வெற்றிபெறும் வேட்பாளரை பொதுஜன பெரமுன பெயரிடும் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |