தமிழர் மரபை கொண்டாடும் லங்காசிறியின் நம்மவர் தைப்பொங்கல் விழா!
தமிழர் திருநாளான தைப்பொங்கலை சிறப்பிக்கும் வகையில், IDM தனியார் பல்கலைக்கழகத்தின் அனுசரணையில், லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ் ஊடகங்கள் இணைந்து நடத்தும் “நம்மவர் தைப்பொங்கல் விழா” எதிர்வரும் 15ஆம் திகதி, தெகிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு தேவஸ்தானத்தில் மிகுந்த கோலாகலத்துடன் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.
தமிழ் மரபும் பண்பாடும் தழைத்தோங்கும் இந்த மகத்தான விழாவில், பொங்கல் பொங்கும் போட்டி, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், இசை மற்றும் நடன நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்று விழாவை மேலும் சிறப்பிக்கவுள்ளன.
இந்த நிகழ்விற்கு இணை அனுசரணையாளர்களாக FADNA மற்றும் Little Lion நிறுவனங்கள் எம்முடன் இணைந்து விழாவை அலங்கரிக்கவுள்ளனர்.
குடும்பத்துடன் கலந்து கொண்டு, தைப்பொங்கலின் ஆன்மீக அர்த்தத்தையும் சமூக மகிழ்ச்சியையும் ஒருசேர அனுபவிக்கக்கூடிய அரிய வாய்ப்பாக இந்த விழா அமையவுள்ளது.
தமிழர் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் உயரிய நோக்குடன் நடைபெறும் இந்த “நம்மவர் தைப்பொங்கல் விழாவில்” அனைத்து மக்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு லங்காசிறி மற்றும் ஐபிசி தமிழ் ஊடகங்கள் அன்புடன் அழைக்கின்றன.
இடம்: தெகிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணு தேவஸ்தானம்
திகதி: 15.01.2025
நேரம்: காலை 08.00 மணி