ரணிலுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சறுக்கல் - இலக்கு வைக்கப்படும் தமிழர்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றுமொரு அரசியல் சறுக்கலை சந்தித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போர் வெற்றி கொண்டாட்டத்தை தவிர்க்கும் நோக்கிலேயே இந்தேனேஷியாவிற்கு முன்கூட்டியே சென்றதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் இராணுவ வெற்றிக் கொண்டாட்டத்தை ரணில் புறக்கணித்ததாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நேற்றையதினம் நடைபெற்ற இராணுவ நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சில அதிகாரிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெற்றிக் கொண்டாட்டம்
உலக நீர் தினத்தை முன்னிட்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றுவதற்காக ரணில் சென்றுள்ளார்.
18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மாநாடு நடைபெறவுள்ளதால், இராணுவ கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னரே அதில் இணைந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. எனினும் திட்டமிட்ட வகையில் முன்கூட்டியே சென்றதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்ட பின்னர், இராணுவத்தினரின் நலனில் விசேட கவனம் செலுத்துவதாகவும், போரின் போது உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்காக விசேட அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் உறுதியளித்தார்.
பதவிப்பிரமாணம்
எனினும் அடுத்து ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கனவில் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிரமாக உள்ளார்.
அதற்கு இராணுவ வெற்றிக் கொண்டாட்டம் தடையாக இருக்க கூடாது என்ற நிலையில் அவர் முன்கூட்டியே இந்தோனேஷியா சென்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்தோனேஷிய ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக நீர் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.