கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட வீடு : ஆபத்தான பொருளுடன் சிக்கிய இளைஞர்
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 12 போர் வெடிமருந்துகளுடன் குற்றச்செயல்களில் ஈடுபடத் தயாரான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒரு திட்டமிட்ட குற்றவாளி என்றும், போதைப்பொருள் கடத்தல்காரர்களான படோவிட்ட அசங்க மற்றும் சாண்டோவுடன் தொடர்பு வைத்திருந்த நபர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
திடீரென சுற்றிவளைக்கப்பட்ட வீடு
இராணுவப் புலனாய்வுப் பிரிவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் களுபோவில இராணுவ முகாமின் அதிகாரிகள், களுபோவில விமலசர மாவத்தையில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றி வளைத்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடையவர் ஆவார்.
இவர் மேலதிக விசாரணைக்காக கொஹுவல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.