பரபரப்பாகும் கொழும்பு - ஜனாதிபதி ரணில் கொடுத்த உத்தரவு!
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. கொழும்பில் போலி பொலிஸாரினால் கொள்ளை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமையினால் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு நுழைந்த இருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க >>> கொழும்பு வாழ் மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
2. கொழும்பு - 12 புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக அமைதி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களின் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அவரை கைது செய்வதை தடுக்க கோரி நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று அருட்சகோதரர்கள் மற்றும் அருட்சகோதரிகளின் இணைவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க >>> கொழும்பில் நீதிமன்றம் முன்பாக போராட்டம்
3. உணவுப்பொதி மற்றும் தேநீர் என்பவற்றின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க >>> உணவுப்பொதி, தேநீர் விலை குறைப்பு! வெளியானது அறிவிப்பு
4. குடிநீர் கட்டணத்தை உயர்த்த சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான பிரேரணையை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
மேலும் படிக்க >>> குடிநீர் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி
5. சமகால அரசாங்கத்திற்கு எதிராக இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையால் கொழும்பு நகரம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார்.
மேலும் படிக்க >>> பரபரப்பாகும் கொழும்பு - திடீரென இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி ரணில்
6. தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அறிவுச் செயன்முறையை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளல், வியாபாரச் செயன்முறையை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளல், வேறு நாடுகளில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்களுக்கான கணக்கு, நிர்வாக மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அலுவலகங்கள் மற்றும் தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வியாபார நிறுவனங்களின் இயல்புகளுக்கு அமைய குறித்த தொழில்களில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வேறு நாடுகளின் நேர அட்டவயைக்கமைய பணிபுரிவதற்கு நேரிடுகிறது.
மேலும் படிக்க >>> தனியார் துறை ஊழியர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி
7. இலங்கையில் 16 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தயாராகி வருகிறது. தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை செய்யும் சூழலுக்குப் பழக்கப்படுத்தப்படாததால் தொழில்துறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க >>> பாடசாலையில் கற்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - கிடைக்கவுள்ள அதிஷ்டம்
8. இலங்கையில் மின்சார கட்டணத்தை பாரியளவு அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75 சதவீதம் அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் படிக்க >>> பாரியளவில் அதிகரிக்கப்படும் மின்சார கட்டணம்! நாளை முதல் நடைமுறை
9. நாடாளுமன்றத்தை வன்முறையில் இருந்து பாதுகாத்து ஜனநாயகத்தை பாதுகாத்த இராணுவ வீரர்கள் தேசத்தால் கெளரவிக்கப்படுகிறார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை நசுக்கி, ஜனநாயகத்தை பாதுகாத்து, சட்ட சபையை முடக்கிய வன்முறையாளர்களை ஒடுக்கிய இராணுவத்தினருக்கு தேசத்தின் புகழுரை உரித்தாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க >>> ரணில் கொடுத்த உத்தரவு! அடுத்த நாளே மாறிய நிலைமை - அவரே வெளிப்படுத்தியுள்ள தகவல்
10. விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதி சமையல் எரிவாயு விலையைத் திருத்தம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான சமையல் எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் செலவு வரம்பின் அடிப்படையில் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதி சமையல் எரிவாயு விலையைத் திருத்தம் செய்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> ஒவ்வொரு மாதமும் எரிவாயு விலையைத் திருத்தம் செய்ய அனுமதி