பரபரப்பாகும் கொழும்பு - திடீரென இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி ரணில்
சமகால அரசாங்கத்திற்கு எதிராக இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையால் கொழும்பு நகரம் பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார்.
இராணுவ முகாமிற்கு விஜயம்

ஜனாதிபதியாக பதவியேற்றதும் இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ரணில் விக்ரமசிங்க முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
அன்றிரவு காலிமுகத்திடலில் திடீரென புகுந்த படையினர் அங்கிருந்தவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதுடன், பெரும் வன்முறையும் வெடித்திருந்தது.
பொன்சேகா அழைப்பு

இன்றையதினம் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டத்திற்கு முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளார்.
பரபரப்பான நேர்தில் ஜனாதிபதி மேற்கொண்டுள்ள இந்த விஜயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri