தனியார் துறை ஊழியர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி
தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அறிவுச் செயன்முறையை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளல், வியாபாரச் செயன்முறையை வெளியிலிருந்து பெற்றுக் கொள்ளல், வேறு நாடுகளில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்களுக்கான கணக்கு, நிர்வாக மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற அலுவலகங்கள் மற்றும் தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வியாபார நிறுவனங்களின் இயல்புகளுக்கு அமைய குறித்த தொழில்களில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வேறு நாடுகளின் நேர அட்டவயைக்கமைய பணிபுரிவதற்கு நேரிடுகிறது.
மாலை 6 மணிக்குப் பின் பெண்களை பணியில் அமர்த்தல்
ஆனாலும் 1954ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும், ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் மாலை 6 மணிக்குப் பின்னர் பெண்களை மட்டுப்படுத்தப்பட்ட தொழில்களில் மாத்திரமே பணியில் அமர்த்த முடியும்.
குறித்த நிலைமையின் கீழ் பெண்களை இரவு வேலைகளில் தொழிலில் அமர்த்துதல் தொடர்பாக தற்போது காணப்படும் வரையறுக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளைத் திருத்தம் செய்வதற்காக 1954ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் (ஊழியத்தையும், ஊதியத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தை திருத்தம் செய்வதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.