எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் நாட்டில் பாரிய போராட்டங்கள் வெடிக்கலாம்! வெளியானது தகவல்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 அவசரகாலச் சட்டம் தொடர்பான பிரகடனம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பிரகடனத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் வழங்கப்பட்டன.
மேலும் படிக்க >>> பெரும்பான்மை வாக்குகளால் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது
2 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தொடர்ந்தும் தங்கியிருக்க தீர்மானித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்ற போது அவருக்கு வழங்கப்பட்ட அவரது குறுகிய கால பயண அனுமதி, மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் படிக்க >>>விசா காலம் நீடிப்பு! கோட்டாபயவின் அடுத்த திட்டம் அம்பலம்
3 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>>கோட்டாபயவை கைது செய்து கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட வேண்டும்
4 கொழும்பு மீரிகமவில் ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர் கைது செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் பரவியதையடுத்து, குறித்த நபர் இந்த செயலை செய்துள்ளார்.
மேலும் படிக்க >>> கோட்டாபய கைது செய்யப்படுவார் என்ற அச்சத்தில் தற்கொலை செய்த விசுவாசி
5 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> கோட்டாபயவை கைது செய்யும் நகர்வை முன்னெடுத்துள்ள யஸ்மின் சூகா
6 கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரொருவர் பலவந்தமாக சிலரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க >>> கொழும்பில் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த இளைஞர் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்
7 உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 621,081 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க >>> இலங்கையில் சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!
8 அமெரிக்கா சென்றிருந்த இலங்கையர்கள் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கைக்கு கரையோர பாதுகாப்பு கப்பல் ஒன்றை நன்கொடையாக அமெரிக்கா வழங்கியுள்ளது.
மேலும் படிக்க >>> அமெரிக்காவில் தலைமறைவான இலங்கையர்கள்
9 எதிர்வரும் 9ஆம் திகதியன்று கொழும்பில் ஒன்றுக்கூடி ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> எதிர்வரும் 9ஆம் திகதியன்று கொழும்பில் மீண்டும் போராட்டம்!
10 காலி முகத்திடல் போராட்டக்களம் தற்போது போதைப்பொருள் அடிமைகளின் கூடாரமாக மாறியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.