எதிர்வரும் 9ஆம் திகதியன்று கொழும்பில் மீண்டும் போராட்டம்! சபையில் அறிவிப்பு (Live)
எதிர்வரும் 9ஆம் திகதியன்று கொழும்பில் ஒன்றுக்கூடி ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், போராட்டக்காரர்கள் நாட்டுக்காக போராடினார்கள். அவர்கள் எங்களின் உறவினர்கள். எனவே அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம். அதேநேரம் ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்க வேண்டாம்.
ஒரே கொள்கைக்காக ஒன்றிணைய வேண்டும்
இவ்வாறான தாக்குதல்கள் மூலம் இலங்கை இராணுவத்துக்கு கிடைத்த பெருமையை பழுதாக்க வேண்டாம். இதேவேளை போராட்டவாதிகள் மத்தியில் பல்வேறு கொள்கைகள் இருக்கின்றபோதும், ஒரே கொள்கைக்காக ஒன்றிணைய வேண்டும்.
இந்தநிலையில் ஒருவரை அல்லது இருவரை அகற்றியதன் மூலம் தூய்மையான அரசியலை ஏற்படுத்த முடியாது.

எனவே எதிர்வரும் 9ஆம் திகதியன்று கொழும்பில் ஒன்றுக்கூடி ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.
இந்தநிலையில் போராட்டவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri