கோட்டாபயவை கைது செய்து கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட வேண்டும்! லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற கடிதம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கோல்பர்ன் சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு இது தொடர்பான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட வேண்டும்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போர்க்குற்றங்களுக்காக கைது செய்ய வேண்டும் எனவும், அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் விசா காலத்தை நீடித்த கோட்டாபய - வெளியான புதிய தகவல் |
கோட்டாபய ராஜபக்சவினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதும் இங்கிலாந்தில் இருப்பதாகவும், கோட்டாபய தொடர்பான விசாரணைகளுக்காக அவர்களை நேர்காணல் செய்வதற்கு உங்களுக்கு எம்மால் உதவ முடியும் எனவும் குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.