லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் லிட்ரோ எரிவாயுவை நுகர்வோருக்கு பற்றாக்குறையின்றி விநியோகிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைகளின் போது நுகர்வோரிடையே எரிவாயுவுக்கான அதிக தேவையை கருத்தில் கொண்டு, சந்தையில் எரிவாயு பற்றாக்குறையை ஏற்படுத்தாமல் தொடர்ந்து விநியோகிக்குமாறு லிட்ரோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான கையிருப்பில் தேவைக்கு அதிகமாகவே விநியோக திட்டங்களையும் லிட்ரோ ஏற்கனவே வகுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கைக்கு சொந்தமான 42,000 மெட்ரிக் டொன் எரிவாயு இருப்பு தற்போது மாலைத்தீவில் நிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய இந்த அளவு போதுமானது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு வருகை தரும் கப்பல்
இந்த இருப்பை கூடிய விரைவில் நாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மே மாதத்திற்கு தேவையான 33,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிச்செல்லும் ஒரு கப்பல் ஏப்ரல் 25 ஆம் திகதி நாட்டிற்கு வந்து சேரும் என்றும் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், 7,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிச்செல்லும் ஒரு கப்பல் ஏப்ரல் 4 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நலிந்த குருகுலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் கிணறுகளை அழிக்கப்போவதாக டிரம்பின் நேரடி எச்சரிக்கை: 2022இற்கு பின் முதல்முறையாக நடந்த மாற்றம்
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam