மிக மிகத் துல்லியமான Tactical Picture.. ஈரானை வேரறுக்கும் அமெரிக்காவின் போர் யுத்தி
அமெரிக்க மற்றும் ஈரானிய படைகளுக்கு இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் எல்லைக்கு அப்பாற்பட்ட இராணுவ வலிமையை முடக்கும் நோக்கில் அமெரிக்கா தனது வான்வழி உத்திகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான் தனது எல்லைகளுக்கு வெளியே ஆதிக்கத்தைச் செலுத்துவதைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்கப் படைகள் ஈரானின் இராணுவக் கட்டமைப்புகளைத் தொடர்ந்து அழித்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக USS ஆபிரகாம் லிங்கன் (CVN 72) விமானம் தாங்கி போர்க்கப்பலில் இருந்து அதிநவீன விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதிதீவிர தொழில்நுட்பம்
போர்க்களத்தின் 'கண்கள்' இந்த நடவடிக்கையில் E-2D அட்வான்ஸ்டு ஹாக்ஐ விமானங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
U.S. forces continue to eliminate the Iranian regime's ability to project power in meaningful ways outside of Iran's borders. pic.twitter.com/R2T0F9JOrY
— U.S. Central Command (@CENTCOM) March 30, 2026
இவை வான்வெளியில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாகக் கண்காணித்து தரவுகளைச் சேகரிக்கின்றன.
சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கட்டளை மையங்களுக்கும் (Command Centers) மற்ற போர் விமானங்களுக்கும் உடனுக்குடன் பகிர்ந்து, போர்க்களத்தின் தெளிவான தந்திரோபாயப் படத்தை (Tactical Picture) வழங்குகின்றன.

இதன் மூலம் எதிரி நாட்டு ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களை முன்கூட்டியே கண்டறிந்து அழிப்பது எளிதாகிறது.
ஏற்கனவே 170க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகள் தாக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் இந்தத் தரவுசார்ந்த வான்வழித் தாக்குதல்கள் (Data-driven air strikes) ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைகுலையச் செய்துள்ளன.
குறிப்பாக, ஈரானின் ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் தொலைதூர ஏவுகணை ஏவுதளங்களைச் செயலிழக்கச் செய்வதே அமெரிக்காவின் தற்போதைய பிரதான இலக்காகும்.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam