வட்டி வருமானத்தின் பெறுமதி! மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு
பணவீக்கம் அதிகரித்தால் வட்டி வருமானத்தின் பெறுமதி குறைந்து விடும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வட்டிப் பணத்தில் வாழ்க்கையை நடத்த முயற்சி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வட்டி வீதங்கள் குறையும் போது, வைப்புக்களுக்கான வட்டி வருமானம் குறைவடையும். ஆனால் இலங்கையிலேயே மக்கள் வட்டிப் பணத்தில் வாழ்க்கையை நடத்த முயற்சி செய்கின்றார்கள்.

ஏனைய நாடுகளில் வட்டி வீதங்கள் மிகவும் குறைவாகும். எனவே அங்கு பணத்தை வைப்புச் செய்து அதில் கிடைக்கும் வட்டி வருமானத்தில் வாழ்வது கடினமாகும். அதனைவிட அந்தப் பணத்தை வேறு வழிகளில் முதலீடு செய்து உழைக்கலாம்.
எனினும், இலங்கையில் வட்டி வீதங்கள் அதிகம் என்பதால் வைப்புக்களை வைத்து வரும் வட்டியில் வாழ முயற்சிக்கின்றனர். எனினும் பணவீக்கம் அதிகரித்தால் வட்டி வருமானத்தின் பெறுமதி குறைந்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam