முள்ளிவாய்க்கால் கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் இன்று(19.12.2024) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த படகானது திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது.
25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள்
இந்த படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் சங்கத்தினர், கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
படகில் காணப்பட்டவர்களில் சிலர்மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயனமுற்ற நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவர்களுக்கு மருத்துவ உதவிகள் உணவுகள் வழங்கப்பட்டதோடு திருகோணமலைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri