நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் கைதிகள் அல்ல! வெளிவந்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்....
நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளும் 'தண்டனை பெற்ற கைதிகள்' என்றே ஊடகங்களாலும் அரசாங்கத் தரப்பாலும் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டனர்.
ஆனால், உயிரிழந்த 21 பேரும் சந்தேக நபர்கள் ஆவர். அதாவது, உயிரிழந்த அதிகாரிகளைத் தவிர ஏனைய 21 பேரும் சந்தேக நபர்கள் என தென்னிலங்கை ஆங்கில பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சமிந்தர பேர்டினென்டோ (Shamindra Ferdinando) கண்டுபிடித்துள்ளார்.
சிறைச்சாலைத் திணைக்களம் வழங்கிய தகவல்
இவ்விடயம் தொடர்பில் அவர் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் குறிப்பிட்ட விடயங்கள்.
கைதிகளுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் தெளிவான வேறுபாடு இருக்க வேண்டும். ஆனாலும் கைதிகள் என்ற வரையறைக்குள் தடுத்து வைத்திருப்பவர்களும் அடங்குகின்றனர்.
ஆனால் அரசாங்கம் இவர்களை சந்தேக நபர்கள் என்று ஏன் சொல்லவில்லை. இவர்கள் சந்தேக நபர்களா அல்லது தண்டனை கைதிகளா என்பது தொடர்பில் சிறைச்சாலை ஆவணங்களில் குறிப்பெடுக்கப்படும்.ஆனால் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை

சிறைச்சாலைத் திணைக்களத்திலிருந்து கிடைத்த விசேட தகவல்கள் மூலம் நாம் இதை உறுதிப்படுத்திக் கொண்டோம். 'சந்தேக நபர்' என்பவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் அல்ல.
நீதிமன்ற விசாரணை செயல்முறையின் மூலம் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை, அவர் குற்றம் செய்யாத ஒரு நிரபராதியாகவே கருதப்படுவார். அதேபோல காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சந்தேக நபர்கள் தான்.
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan